போளூரில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டார கிளைத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் வின்சென்ட் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் மாவட்ட பொருளாளர் மெய்யழகன் கலந்து கொண்டு, கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்குதல், பொங்கல் போனஸ் நாள் கணக்கில் வழங்குதல், கிராம உதவியாளர்களுக்கு பழைய முறையில் ஓய்வூதியம் வழங்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்துப் பேசினார்.
மேலும், 5.9.2018 அன்று சிறுவிடுப்பு எடுத்தல், 27.9.2018 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக அலுவலகம் அருகே தர்னா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் ஜோதி நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திடீர் திருப்பம்! ஹார்ட் பீட் - 3 தொடரில் விஜய் சேதுபதி பட நாயகி!

விதியை மீறி பேரவைக்குள் செல்போன் கொண்டு வந்த அமைச்சர்! அதைப் பார்த்து படித்ததால் அதிர்ச்சி!

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

110 விதியின் கீழ் முதல்வரின் அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறியா? டிடிவி தினகரன் கேள்வி
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! பேரவையில் முதல்வர் Vijay பேச்சு! | TN Assembly | TVK


