லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முன்னாள் படைவீரர்கள் தங்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:46 am

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களின் வாரிசுகள் குறித்த பதிவுகள் கணினி மயமாக்கப்பட உள்ளது. எனவே, முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களின் வாரிசுகள் படைப்பணி விவரங்கள், ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை எண், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், வங்கி ஐ.எப்.எஸ்.சி எண் உள்ளிட்ட விவரங்களுடன் தங்கள் புகைப்படத்தை 2 எம்.பி. அளவுக்கு மிகாமலும், படைவிலகல் சான்று, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை பி.டி.எப். வடிவத்தில் 4 எம்.பி.க்கு மிகாமலும் ஸ்கேன் செய்து தாங்கள் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள கணினி மையத்தில் h‌t‌t‌p://‌e‌s‌m‌w‌e‌l.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்பட்ட விவரத்தை திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள், உரிய ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்கு நேரில் வந்தால் அவர்களுக்கு இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக உரிய ஆலோசனை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04175233047 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.