டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி: தகுதியானோர் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை சரிபார்க்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்குத் தகுதியானோர் மாவட்ட வேலைவாய்ப்பு

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:05 am

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்குத் தகுதியானோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
திருவண்ணாமலை, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநரால் அறிவிக்கப்பட்டுள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பதிவுதாரர்களின் பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளது.
இந்தப் பணிக்கு 10-ஆம் வகுப்பு தோல்வியடைந்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பதிவுதாரர்களின் கல்வித் தகுதியை சரிபார்த்து, பரிந்துரை செய்ய வேண்டியுள்ளதால், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்று, அனைத்து கல்விச் சான்றுகளுடன் வரும் 26-ஆம் தேதிக்குள் அலுவலக வேலை நாள்களில் மாலை 5 மணிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுகிப் பயன்பெறலாம். தவறும்பட்சத்தில், தங்களின் பெயரை பரிந்துரைப் பட்டியலில் சேர்க்க இயலாது என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.