/

கரும்புக்கான காப்பீட்டுத்தொகை வந்ததால் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன் குவிந்த விவசாயிகள்

சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்கு கரும்புக்கான காப்பீட்டுத்தொகை வந்ததால், இந்த வங்கி முன் விவசாயிகள் புதன்கிழமை குவிந்தனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 4:04 am

DIN

சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்கு கரும்புக்கான காப்பீட்டுத்தொகை வந்ததால், இந்த வங்கி முன் விவசாயிகள் புதன்கிழமை குவிந்தனர்.
ஆத்துரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஆத்துரை, சித்தாத்துரை, மன்சுராபாத், காட்டுதெள்ளூர், பெரணம்பாக்கம், செம்மியமங்கலம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த விவசாயிகள், கரும்புப் பயிருக்கு கடந்த 2015 -  2016ஆம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்திருந்தனர். அந்த ஆண்டு இந்தப் பகுதியில் நிலவிய கடும் வறட்சி காரணமாக கரும்புப் பயிர்கள் வாடியதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில், வறட்சியால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கான காப்பீட்டுத்தொகை ஆத்துரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு வந்ததையடுத்து, அவர்களின் பெயர் பட்டியல் வங்கி முன் ஒட்டப்பட்டது. இதில் தங்களது பெயர் உள்ளதா என அறிய விவசாயிகள் பலர் வங்கி முன் குவிந்தனர்.
"ரூ.18.71 லட்சம் வந்துள்ளது': இது குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர் (பொ) ஏழுமலை கூறுகையில், ஆத்துரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கரும்புப் பயிருக்கு காப்பீடு செய்து கடன் பெற்ற விவசாயிகள் 266 பேருக்கு 18 லட்சத்து 71 ஆயிரத்து 267 ரூபாய் வந்துள்ளதாக தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.