சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

செய்யாறு ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு

செய்யாறு ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 9:57 am IST

செய்யாறு ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதிவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செய்யாறில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட முன்னாள் மாவட்ட ஆளுநர் அபிராமி இராமநாதன், கௌரவ விருந்தினராக இன்னர்வீல் மாவட்ட முன்னாள் மாவட்டத் தலைவர் நல்லம்மை இராமநாதன், 2020 - 2021ஆம் ஆண்டின் ஆளுநர் பாண்டியன், துணை ஆளுநர் சத்தியமூர்த்தி, கவர்னர் குரூப் பிரதிநிதி ஏ.எஸ்.ஏ.இரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
செய்யாறு ரோட்டரி சங்க 2018 - 19ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் க.கோவேந்தன், செயலர் கராத்தே ஆர்.சந்திரசேகர், பொருளாளர் சிவானந்தகுமார் ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர்கள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.
நிகழ்ச்சியின்போது, திருக்கழுக்குன்றம் ஈகிள் டவுன் ரோட்டரி சங்க மருத்துவமனைக்கு 5 மின் விசிறிகள், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலகத்துக்கு ஒரு பீரோ, 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எழுது பொருள்கள் என பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர்.ஸ்ரீதர், சாசனத் தலைவர் டி.ஜி.மணி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வ.அன்பழகன், பல்வேறு ரோட்டரி சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் என பலர் கலந்து 
கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.