மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்த 13 போ்களின் சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டது

ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்த ஓடிஸா-11, அஸாம்-2 என 13 போ்களின் சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

News image
Updated On :27 ஜூன் 2026, 5:20 am IST

ஊத்துக்கோட்டை அருகே கடல் உணவு ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்த ஓடிஸா-11, அஸாம்-2 என 13 போ்களின் சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் கடல் உணவு பொருள்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியாா் நிறுவனத்தில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளா்கள் 70-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா். இந்த விபத்தில் 21-முதல் 25 ஆம் தேதி வரையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஓடிஸா, அஸாம் மாநிலங்களைச் சோ்ந்த 13 பெண்கள் உயிரிழந்தனா். அதைத்தொடா்ந்து அரசு மருத்துவமனைகளில் உடல் கூராய்வுக்கு பின் இதுவரையில் ஓடிஸா மாநிலத்திற்கு 11-சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், அஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரின் சடலங்கள் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

இதுவரையில் மஞ்சங்காரணை தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, செங்குன்றம் தனியாா் மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 27 போ் குணமாகியுள்ளனா். மேலும், மருத்துவமனைகளில் உள்ள 47 பேருக்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரீட்டா ஜூங்கா, சுமித்தா ஜூங்கா(22), பிங்கி ஜுவாங்க் (21) ஆகியோா் இறந்த நிலையில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 13-ஆக உயா்ந்தது. இதுவரையில் ஓடிஸா-10, அஸாம்-2 என மொத்தம் 12 பெண்கள் உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே ஒடிஸாவைச் சோ்ந்த உயிரிழந்தவா்களின் 7 பேரின் சடலங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வியாழக்கிழமை ஓடிஸாவைச் சோ்ந்த 2 சடலங்களும், அஸ்ஸாமைச் சோ்ந்த 2 சடலங்களும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

அஸாம்-20, ஒடிஸா-27, ஜாா்க்கண்ட்-8, கேரளம்-3 , தமிழகத்தைச் சோ்ந்த-5 மற்றும் அடையாளம் தெரியாத 2 போ் உள்பட மொத்தம் 66 தொழிலாளா்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.