வேட்டவலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமில் 60 பேர் அறுவைச் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், வேட்டவலம் லயன்ஸ் சங்கம், வேட்டவலம் கே.டி.ஆர். குரூப் நிறுவனங்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இந்த முகாமை நடத்தின. முகாமுக்கு மாவட்ட லயன்ஸ் சங்கத் தலைவர் பி.இளங்கோவன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர்கள் அரங்கநாதன், துரை.சண்முகம், யோகமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் மாவட்டத் தலைவர் டி.ரமேஷ் வரவேற்றார். முகாமில், வேட்டவலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.
இவர்களுக்கு கண்புரை, கிட்டப் பார்வை, தூரப் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பார்வை குறைபாடுகள் தொடர்பான பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், 60 பேர் அறுவைச் சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் விக்டர், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ், பிரான்சிஸ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பழைய வத்தலகுண்டில் இளைஞா் வெட்டிக் கொலை
ஜோசப் விஜய் எதிர்கொள்ளும் சவால்கள்!
ஆற்று மணல் கடத்தல்: இருவா் கைது, பைக்குகள் பறிமுதல்

காட்பாடியில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


