பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் கருவிகள்

சேத்துப்பட்டை அடுத்த அப்பேடு, செய்யாறு வட்டத்திலுள்ள ஆக்கூர் ஆகிய கிராமங்களில் உழவர்  உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண்

Updated On :7 ஜூன் 2018, 8:23 am IST

சேத்துப்பட்டை அடுத்த அப்பேடு, செய்யாறு வட்டத்திலுள்ள ஆக்கூர் ஆகிய கிராமங்களில் உழவர்  உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண், தோட்டக்கலைத் துறைகள் சார்பில் வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது. 
சேத்துப்பட்டை அடுத்த அப்பேடு கிராமத்தில் வேளாண் துறை சார்பில், உழவர்  உற்பத்தியாளர் குழுவுக்கு நடவு நடும் இயந்திரம் மற்றும் 2 பவர் டில்லர் டிராக்டர் ஆகிய வேளாண் கருவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
விழாவில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் இரா.செல்வசேகர், உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு வேளாண் கருவிகளை வழங்கினார். இதில், சேத்துப்பட்டு வேளாண் உதவி இயக்குநர் கி.கலைச்செல்வி, வேளாண் அலுவலர் ஆ.ஆனந்தன், துணை வேளாண் அலுவலர் து.ராமு, உதவி வேளாண் அலுவலர் பு.பாஸ்கரன் மற்றும் வேளாண்மைத் துறையினர், உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆக்கூர் கிராமத்தில்...: செய்யாறு வட்டம், ஆக்கூர் கிராமத்தில் அனக்காவூர் வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் கூட்டுப் பண்ணையம் திட்டன்கீழ், உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு மானியத்துடன் கூடிய விவசாயக் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் ஆர்.மணிகண்டன் தலைமை வகித்தார். செயலர் எஸ்.வெங்கடேசன், பொருளாளர் எஸ்.சுந்தரவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனக்காவூர் வட்டார தோடக்கலைத் துறை உதவி அலுவலர் இ.முருகதாஸ், உழவர் உற்பத்தியாளர் குழு பங்களிப்புத் தொகையுடன் அரசு மானியத் தொகை ரூ.5.52 லட்சத்தில் 3 பவர் டில்லர், ஒரு களை வெட்டும் கருவி ஆகியவற்றை ஆக்கூர், கூழமந்தல் கிராமங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு வழங்கினார். 
நிகழ்ச்சியில் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.