காமன்வெல்த் தொடரில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் விந்தியாராணி தேவி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
இதன்மூலம், இந்தியாவுக்கு 6 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பளுதூக்குதலில் மட்டும் 5 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், பெண்களுக்கான 58 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் விந்தியாராணி தேவி கலந்துகொண்டார்.
இப்போட்டியில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த விந்தியாராணி வெண்கலப் பதக்கம் வென்றார். கனடாவைச் சேர்ந்த ஆன் சோஃபி டாஷெரோ வெள்ளிப் பதக்கமும் நைஜீரியாவைச் சேர்ந்த ரகியாடு தங்கப் பதக்கமும் வென்றார்.
27 வயதாகும் மணிப்பூரைச் சேர்ந்த விந்தியாராணி வென்ற வெண்கலப் பதக்கத்தால், காமன்வெல்த் தொடரில் இந்தியா பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
மீராபாய் சானு, ரிஷிகாந்தா சிங், ராஜா முத்துப்பாண்டி, ஞானேஸ்வரி யாதவ், விந்தியாராணி தேவி ஆகியோர் பளுதூக்குதலிலும் பாரா பளுதூக்குதலில் ஜண்டு குமார் பதக்கம் வென்றுள்ளார்.
Summary
Commonwealth Games 2026 India Bindyarani Devi won bronze medal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

6 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவ தேவி யாத்திரை மீண்டும் தொடக்கம்!

அசைக்கமுடியாத மனோதிடம்... முதல் பதக்கம் வென்றவருக்கு மோடி புகழாரம்!

போலியோ பாதிப்பு, விடாமுயற்சி... கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்!

அமா்நாத், வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0




