புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தங்கப் பதக்கம் வென்ற பின் அழுதது ஏன்? மனம் திறந்த மீராபாய் சானு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பின் அழுதது குறித்து பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு மனம் திறந்துள்ளார்.

Mirabai Chanu in tears after winning the gold medal.

தங்கப் பதக்கம் வென்றபின் கண்ணீருடன் மீராபாய் சானு - படம் | AP

Published On :

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பின் அழுதது குறித்து பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு மனம் திறந்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.

தங்கப் பதக்கம் வென்ற பிறகு மீராபாய் சானு கண்ணீருடன் காணப்பட்டார். இந்த நிலையில், தான் அழுததற்கான காரணம் குறித்து மீராபாய் சானு மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன். போட்டிக்கு முந்தைய நாளில் வண்ணத்துப் பூச்சிகள் வடிவில் தேசியக் கொடி ரிப்பனை தயார் செய்து அதனை அணிந்து கொண்டேன். தங்கப் பதக்கம் வென்ற பிறகு தேசியக் கொடியைப் பார்த்தது மற்றும் தேசிய கீதத்தைக் கேட்டதும் என்னை அறியாமல் என்னுடைய கண்களில் நீர் பெருகியது. காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்ததால், என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்ட அனைவருக்கும் நன்றிகூற விரும்புகிறேன் என்றார்.

கடந்த இரண்டு காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Weightlifter Mirabai Chanu has opened up about shedding tears after winning the gold medal at the Glasgow Commonwealth Games.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.