போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

காமன்வெல்த் போட்டி: நீச்சல், நீளம் தாண்டுதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் நீச்சல், நீளம் தாண்டுதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

News image

முரளி ஸ்ரீஷங்கர், லோகேஷ் சத்யநாதன், சஜன் பிரகாஷ்.

Updated On :27 ஜூலை 2026, 6:45 pm IST

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் நீச்சல், நீளம் தாண்டுதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் 5-ஆவது நாளான இன்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

நீளம் தாண்டுதல்

நீளம் தாண்டுதல் போட்டிக்கான தகுதிச் சுற்று இன்று நடைபெற்றது. குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்த இந்தியாவைச் சேர்ந்த முரளி ஸ்ரீஷங்கர் 8.01 மீட்டர் தூரத்தைத் தாண்டி முதலிடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

குரூப் பி பிரிவில் இடம்பிடித்த மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் சத்யநாதன் முதலில் 7.77 மீட்டர் தூரத்தைத் தாண்டினார். ஆனால், அடுத்தடுத்த முறைகளில் இவர் தகுதி பெறுவதற்கான தூரத்தை தாண்டவில்லை என்றபோதும், முதல்முறை சிறப்பாகத் தாண்டியதால் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றார். இறுதிச் சுற்று ஜூலை 29 அன்று நடைபெறவுள்ளது.

நீச்சல்

நீச்சல் போட்டிக்கான தகுதிச் சுற்றில் ஆடவர் 200 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சலில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் பங்கேற்றார். முதல் 100 மீட்டர் தூரம் வரை முன்னிலையில் இருந்த அவர், இறுதியில் சற்றே பின் தங்கினார். முடிவில் பந்தய தூரத்தை 1:58.59 என்ற நேரத்தில் கடந்து இரண்டாம் இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். இறுதிச்சுற்று இன்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.

Summary

Commonwealth Games: India advances to the finals in swimming and long jump!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.