பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

22 ஆண்டுகளுக்குப் பின்னர் சாதனையை முறியடித்த ஆன்ஸி சோஜன்...

நீளம் தாண்டுதலில் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரளத்தைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ் உருவாக்கிய சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார் ஆன்ஸி சோஜன்.

News image
Updated On :12 ஜூலை 2026, 4:03 am IST

நீளம் தாண்டுதலில் இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் கேரளத்தைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ் உருவாக்கிய சாதனையை முறியடித்து, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார் கேரளத்தைச் சேர்ந்த ஆன்ஸி சோஜன்.

இந்தப் போட்டியின்போது, வரலாறு படைத்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ், புதிய வரலாறு படைத்த இன்றைய தலைமுறையைச் சேர்ந்த ஆன்ஸி சோஜன் அருகில் புன்னகைத்தபடி நின்றிருந்தது அபூர்வமான காட்சியாக அமைந்தது. சாதனையாளர்கள் வெறும் சாதனைகளை மட்டும் உருவாக்குவதில்லை; என்றோ ஒரு நாள் அந்தச் சாதனைகளை முறியடிக்கப் போகும் சாதனையாளர்களையும் அவர்களே உருவாக்குகின்றனர்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத வருத்தத்துடன் இருந்த வீராங்கனை ஆன்சி சோஜன், ஜூன் 27-இல் நீளம் தாண்டும் பயிற்சியில் ஈடுபட்டார். புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் நீளம் தாண்டும் களத்தில் ஆன்ஸி புயல் போலத் தாவிக் குதித்தபோது, புதிய வரலாறு பிறந்தது. 65-ஆவது தேசிய மூத்தோர் தடகளப் போட்டியில், தேசிய சாதனையுடன் 6.88 மீட்டர் தூரம் தாண்டி ஆன்ஸி தங்கப் பதக்கத்தைச் தட்டிச் சென்றார்.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் அஞ்சு பாபி ஜார்ஜ் படைத்த 6.83 மீட்டர் தூரமே பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் சிறந்த சாதனையாக இருந்தது.

2003 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்ற அதே அஞ்சு ஜார்ஜ்தான், எண்ணற்ற இளம்பெண்கள் தங்கள் இலக்கையும் தாண்டிப் பெரிய கனவுகளைக் காண ஊக்கமளித்தார். இந்த நிலையில், ஆன்ஸி ஐந்தாவது தாண்டுதலில், இந்தச் சாதனையை நிகழ்த்தினார். ஆன்ஸியின் தூரம் தாண்டுதலில், 2011-இல் கேரள வீராங்கனை மயூகா ஜோனி படைத்திருந்த சாதனையை (6.63 மீட்டர்) முறியடித்திருந்தார்.

'இந்தச் சாதனை எனது தந்தையின் விருப்பம். அவரது உந்துதலால் நிகழ்ந்தது. தேசிய அளவில் சாதனை படைப்பதே எனது லட்சியமாக இருந்தது. இந்தச் சாதனையும் தங்கப் பதக்கமும் அப்பாவுக்கு அளிக்கும் பரிசு'' என்கிறார் ஆன்ஸி சோஜன்.

யார் அந்த ஆன்ஸி?

கேரளத்துக்கு உள்பட்ட திருச்சூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நட்டிகா எடப்பள்ளி சோஜன்- ஜான்ஸி தம்பதியின் மகளான ஆன்ஸி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு (6.48 மீட்டர்) தகுதி பெற்றார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஆன்ஸி, மும்பை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் ஆதரவில், கண்ணூரைச் சேர்ந்த பயிற்சியாளர் அனூப் ஜோசப்பிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

ஆன்ஸியின் முந்தைய சிறந்த தாண்டுதல் 6.75 மீட்டராகும், இதை அவர் ராஞ்சியில் மே மாதத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் தாண்டியிருந்தார். ஜூன் 27 -இல் சாதனைத் தாண்டுதலை ஆன்ஸி அப்போது செய்திருந்தால், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஆன்ஸி இடம் பெற்றிருப்பார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதி வரம்பு 6.84 மீட்டர் ஆகும்.

புவனேசுவரில் நடக்கும் 65-ஆவது தேசியப் போட்டியில், தமிழ்நாடு 16 பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது.

அஞ்சு ஜார்ஜின் பாராட்டு

'ஆன்ஸியின் சாதனை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு சாதனையை முறியடிக்க 22 ஆண்டுகளானது என்பது அந்த விளையாட்டில் இந்தியா சரிவர இன்னும் முன்னேறவில்லை என்றும் அர்த்தம். இதைச் சரிசெய்யவே நான் விளையாட்டு அறக்கட்டளையைத் தொடங்கினேன். இந்த ஆண்டில் ஆன்ஸி சோஜன் அல்லது ஷைலா சிங் எனது சாதனையை முறியடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆன்ஸியின் வேகமும், செயல்பாடும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. ஆன்ஸி, ஷைலாவிடம் 7 மீட்டர் நீளம் தாண்டும் திறன் உள்ளது. அவர்களுக்கு இடையேயான போட்டி, அவர்களை மேலும் முன்னேறத் தூண்டும்'' என்கிறார் அஞ்சு ஜார்ஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.