தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

சாத்தனூர் அணைக்கு விநாடிக்கு 1,200 கன அடி நீர்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1,200 கன அடியாக உயர்ந்ததால், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On :8 ஜூன் 2018, 1:35 am IST

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 1,200 கன அடியாக உயர்ந்ததால், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணையில் தற்போது மதகு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, அணையின் நீர்மட்ட உயரம் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிகப்படியான உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூரில் உள்ள அணைக்கு வந்துகொண்டிருக்கிறது.
அதன்படி, வியாழக்கிழமை அணைக்கு விநாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியாக உயர்ந்தது. சாத்தனூர் அணையின் நீர்மட்டமும், நீர்வரத்தும் அதிகரித்து இருப்பதால், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.