தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

பள்ளி செல்லாத மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

வேட்டவலம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜூன் 2018, 1:33 am IST

வேட்டவலம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ராஜம்மாள் தலைமை வகித்தார். கிராம கல்விக்குழுத் தலைவர் திருமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் குணசேகரன், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் ஆதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் மோகன், வே.ஸ்ரீராமுலு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தனசேகரன், ஆசிரியப் பயிற்றுநர்கள் வெங்கடேசன், கலைச்செல்வி, வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர்.
மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் சலுகைகள், ஊக்க வகுப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது. முடிவில், மாணவ, மாணவிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில், வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.