திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மகாத்மா காந்தி நினைவு தினம்

வந்தவாசி பகுதி கல்லூரிகளில் மகாத்மா காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:39 am

DIN

வந்தவாசி பகுதி கல்லூரிகளில் மகாத்மா காந்தி நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மாணவர்கள் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
வந்தவாசி திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு கல்லூரி நிறுவனர் ச.அருணாசலம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கல்லூரித் தாளாளர் பாலாமணி அருணாசலம், துணைத் தலைவர் அ.கணேஷ்குமார், இயக்குநர் பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு கல்லூரித் தலைவர் வி.முத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். கல்லூரிப் பொருளாளர் எஸ்.பழனிச்சாமி, முதல்வர் (பொறுப்பு) இரா.ஏழுமலை மற்றும் இயக்குநர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.