ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப் பூச தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப் பூசத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:40 am

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தைப் பூசத்தையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, புதன்கிழமை தை மாதம், பூச நட்சத்திரத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, உற்சவர் ஸ்ரீசந்திரசேகரர் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள ஈசான்ய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிக்குப் புறப்பட்டுச் சென்றார். பகல் 12.30 மணிக்கு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரி முடிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தபடியே உற்சவர் ஸ்ரீசந்திரசேகர் மீண்டும் கோயிலை வந்தடைந்தார். இந்த தீர்த்தவாரியைக் காணவும், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீசந்திரசேகரரைக் காணவும் ஏராளமான பக்தர்கள் வழிநெடுகிலும் திரண்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.