சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

வந்தவாசி அருகே செவ்வாய்க்கிழமை மின்மாற்றியில் ஏறியபோது, மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

Updated On :29 மார்ச் 2018, 3:50 am

வந்தவாசி அருகே செவ்வாய்க்கிழமை மின்மாற்றியில் ஏறியபோது, மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசி மகன் ஏழுமலை (27). இவரது மனைவி மீனா (23). இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. 
கடந்த சில மாதங்களாக ஏழுமலை சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அந்தக் கிராமத்தில் அங்காளம்மன் கோயில் அருகே உள்ள மின்மாற்றி மீது ஏழுமலை திடீரென ஏறியுள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டார்.
இதனால் பலத்த காயமடைந்த ஏழுமலையை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
எனினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மாசி அளித்த புகாரின்பேரில், பொன்னூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.