திருவண்ணாமலை ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கு, பகவானின் நூற்றாண்டு ஜயந்தி விழா கடந்த ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, வரும் டிசம்பர் வரை நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ பகவான் யோகி ராம்சுரத்குமார் சந்நிதியில் சிறப்பு அபிஷேக - ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை மும்பையைச் சேர்ந்த ஸ்வஸ்திகா, சுபிக்ஷா குழுவினரின் பக்திப் பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமாயண உபன்யாசம்: தொடர்ந்து, மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை சென்னையைச் சேர்ந்த ஸ்ரீசுந்தரராம தீட்சிதரின் வால்மீகி ராமாயணம் குறித்த உபன்யாசம் நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆஸ்ரம தலைவரும், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான
டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் மா.தேவகி, ஆர்.விஜயலட்சுமி, ஜி.ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், டி.எஸ்.ராமநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன், தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் மற்றும் ஆஸ்ரம ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருகிய மிளகாய் செடிகள்: விவசாயிகள் கவலை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம்

ராமேசுவரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான படகு தீயில் எரிந்து சேதம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

