மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வேட்டவலம் பேரூராட்சியில் 5 தண்ணீர் தொட்டிகள் திறப்பு

வேட்டவலம் பேரூராட்சிப் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய தண்ணீர்

Updated On :21 மே 2018, 2:11 am

வேட்டவலம் பேரூராட்சிப் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய தண்ணீர் தொட்டிகளை கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
வேட்டவலம் பேரூராட்சிக்கு உள்பட்ட தேரடி தெரு, கோயில் தெரு, வ.உ.சி தெரு, நடுத்திட்டு பகுதி, சுனைமேடு ஆகிய 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய தண்ணீர் தொட்டிகளை அமைக்க கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்தை ஒதுக்கினார்.
இந்த நிதியில் 5 இடங்களிலும் ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன. இந்தத் தண்ணீர் தொட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேட்டவலம் திமுக நகரச் செயலர் ப.முருகையன் தலைமை வகித்தார்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியச் செயலர் ஆராஞ்சி ஆறுமுகம், மாவட்டப் பிரதிநிதி பழனி, நகர அவைத் தலைவர் ரியாஸ், நகர துணைச் செயலர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 5 தண்ணீர் தொட்டிகளையும் திறந்து வைத்துப் பேசினார். மேலும், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், முன்னாள் கவுன்சிலர்கள் சிவசங்கரி, பாலமுருகன், வார்டு செயலர்கள் அன்பு, சண்முகம், மகாலிங்கம், பாரி உள்பட திமுகவினர், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.