வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயில், சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு கிராமத்தில் கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயில் ஆகியவற்றில் துரியோதனன் படுகள நிகழ்ச்சிகள் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றன.
இளங்காடு கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயிலில் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் அக்னி வசந்த விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து, வில் வளைப்பு, சித்திராங்கி மாலையிடுதல், சுபத்திரை மாலையிடுதல், அர்ச்சுனன் தபசு, விராட பருவம், கிருஷ்ணன் தூது, அரவான் களபலி, பீஷ்மர் சண்டை, அபிமன்யு சண்டை, கர்ண மோட்சம் ஆகிய தலைப்புகளில் மகாபாரத சொற்பொழிவு, நாடகம் நடைபெற்றன.
மேலும், மேல்நந்தியம்பாடி தண்டபாணி பாரதியார் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவும், வெண்மணிஆத்தூர் செல்வம் குழுவினரின் தெருக்கூத்து நாடகமும் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, வியாழக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கோயில் உபயதாரர்கள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
நம்பேடு கிராமத்தில்...: சேத்துப்பட்டை அடுத்த நம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள திரெளபதியம்மன் கோயிலில் கடந்த 3-ஆம் தேதி அக்னி வசந்த விழா தொடங்கியது. தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பிற்பகலில் மகாபாரத சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன.
இந்த நிலையில், புதன்கிழமை காலை துரியோதனன் படுகள நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி - புகைப்படங்கள்

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

இந்தியாவுக்கு 6 வது பதக்கம்! பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் விந்தியாராணி தேவி!

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


