செய்யாறில் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்தும் வாடகைக் கட்டடத்தில் இயங்கும் திருவத்திபுரம் தலைமை அஞ்சலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டவும், அஞ்சலகத்தை நகரின் மையப் பகுதிக்கு மாற்றவும் அஞ்சல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது வருவாய்க் கோட்டமாக செய்யாறு விளங்கி வருகிறது. அரசு அலுவலகங்களின் தலைமையிட அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது.
செய்யாறு தொகுதியில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். செய்யாறில் உள்ள சிப்காட் பகுதியில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிகள், கல்லூரிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவ்வளவு சிறப்பு மிகுந்த செய்யாறில் உள்ள திருவத்திபுரம் தலைமை அஞ்சலகம், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்படுவதற்க்கு முன்பு சித்தூர் மாகாணமாக இருந்தபோதே தொடங்கப்பட்டதாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அஞ்சலகத்துக்கு அரசு சார்பில் இடம் ஒதுக்கீடு செய்ய முன்னாள் எம்எல்ஏக்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்தும் அஞ்சலக அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், இன்று வரை சொந்தக் கட்டடம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக புகார் கூறப்படுகிறது. தற்போது செய்யாறு - ஆற்காடு சாலையில் உள்ள கட்டடத்தின் மாடிப்பகுதியில் திருவத்திபுரம் தலைமை அஞ்சலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அஞ்சலகத்தை நகரின் மையப் பகுதிக்கு மாற்ற வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், சென்னையில் உள்ள அஞ்சலக பொது மேலாளர், திருவண்ணாமலை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலருக்கு கோரிக்கை மனு அனுப்பியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஓவ்வூதியர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர் புகார் கூறுகின்றனர்.
எனவே, இந்த அஞ்சலகத்தை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படுத்தும் விதமாக, செய்யாறு நகரின் மையப் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய தரைதளக் கட்டடத்துக்கு மாற்றவும்,
விரைவில் சொந்தக் கட்டடம் கட்டவும் அஞ்சல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீர் சோதனையில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்! | Pondicherry

ஜனநாயகத்தை அழிக்க முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை நியமிக்கிறார் பிரதமர் மோடி! - கார்கே காட்டம்!

இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |


