4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வேடநத்தத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தில் மக்கள் திட்ட இயக்கம் சார்பில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :5 நவம்பர் 2018, 9:29 am IST

கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தில் மக்கள் திட்ட இயக்கம் சார்பில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் டி.கே.லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் ரோமா, கால்நடை மருத்துவ அலுவலர் ஆனந்தன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டத்தில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்துவதன் நோக்கம், பல்வேறு துறைகள் மூலம் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க களப்பகுதி வழிநடத்துநர் முனியம்மாள், இதர சார்புத்துறை அலுவலர்கள், ஊராட்சிச் செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.