போளூர் சன்னதி தெருவில் அமைந்துள்ள சம்பத்கிரி ருக்குமணி சமேத ஸ்ரீலட்சுமிநரசிம்மர் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் புரட்டாசி மாதத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும். அதேபோல, புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை யொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, ஸ்ரீராமர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மேலும், ஸ்ரீபஜகோவிந்தம் அறக்கட்டளை சார்பில், சொற்பொழிவாளர் செந்தாமரைச்செல்வி தலைமையில், ஒழுக்கமே உயர்வு என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது.
தொடர்ந்து, வட்டாட்சியர் தியாகராஜன், காவல் உதவி ஆய்வாளர் தயாளன் ஆகியோர் சொற்பொழிவாளர் செந்தாமரைச்செல்விக்கு சால்வை அணிவித்து கெüரவித்தனர். ராகவா கேபிள் டிவி நிர்வாகி பரணிராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகிகள், பக்தர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

க்யூ.ஆா். கோட் மூலம் அரசு பள்ளியில் ஆன்லைன் மாணவா் சோ்க்கை: ஆசிரியா்களின் புதிய முயற்சி

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

வணிக சமையல் எரிவாயு விலை ரூ.46 உயர்வு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 1 2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு மகிழ்ச்சி!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


