சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

விடுதி மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட விடுதிகளில் பயிலும் 10, 11, 12-ஆம் வகுப்பு, கல்லூரி மாணவ, மாணவிகளின் தேர்ச்சியை அதிகரிக்க எடுக்கப்பட்ட 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருவண்ணாமலை மாவட்ட விடுதிகளில் பயிலும் 10, 11, 12-ஆம் வகுப்பு, கல்லூரி மாணவ, மாணவிகளின் தேர்ச்சியை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைகளின் கீழ் இயங்கும் உண்டு, உறைவிட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், காப்பாளர்கள், காப்பாளினிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
பழங்குடியினர் நலத் திட்ட அலுவலர் சட்டநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் 
க.வ.பரிமளா வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பயிலும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், காப்பாளர்கள், காப்பாளினிகளிடம் மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி கேட்டறிந்தார். 
தொடர்ந்து, 10-ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி பெற சிறப்பாகப் பணியாற்றிய பாடப்பிரிவு ஆசிரியர்கள் 8 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.40 ஆயிரத்துக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்கள், காப்பாளினிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.