தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கக் கொடியேற்று விழா

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 32-ஆம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி, செங்கம் ஊராட்சி ஒன்றிய 

Published On :

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் 32-ஆம் ஆண்டு தொடக்க விழாவை யொட்டி, செங்கம் ஊராட்சி ஒன்றிய 
அலுவலக வளாகத்தில் சங்கக் கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு செங்கம் வட்ட கிளைத் தலைவர் ரவிந்திரநாதன் தலைமை வகித்தார். ஆணையாளர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பழநி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, சங்கக் கொடியேற்றி இனிப்புகளை வங்கினார். மேலும், சங்கத்தின் 32-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, வரும் 15-ஆம் தேதி திருவண்ணாமலையில் ரத்த தான முகாம் மாவட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடத்தப்பட உள்ளது. முகாமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தொடக்கி வைக்கிறார். இதில், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சிச் செயலர்கள், செங்கம் ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.