திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

செங்கத்தில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

செங்கம் நகரில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

Updated On :13 பிப்ரவரி 2019, 10:14 am IST

செங்கம் நகரில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
செங்கம் துக்காப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் போளூர் சாலை மேம்பாலம் வரையிலான சாலையின் இரு புறமும் உள்ள கடைகளின் உரிமையாளர்கள் சாலையை சில அடி தொலைவுக்கு ஆக்கிரமித்து, பொருள்களை அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்தச் சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்ட நிலையில், தற்போது சாலையின் இரு புறமும் தற்காலிகக் கடைகள் அதிகரித்துள்ளன. மேலும், இந்தச் சாலையில் சரக்கு வாகனங்களை நிறுத்தி கடைகளுக்கு பொருள்களை இறக்குவதாலும், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டுச் செல்வதாலும் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரையிலான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. 
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு செங்கம் துக்காப்பேட்டை முதல் போளூர் சாலை மேம்பாலம் வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.