பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வந்தவாசியில் நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குரைஞர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீட்டு மனைகள் வழங்க வேண்டும். இளம் வழக்குரைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், வழக்குரைஞர்கள் ஜி.விஸ்வநாதன், ரா.மணி, பி.ராமலிங்கம், சி.ராஜசேகர், கே.பிரகாஷ், என்.ராமன், ஷண்முகபிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








