செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் வட மாநில தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
செய்யாறை அடுத்த தேத்துறை கிராமத்தில் தனியார் கனிம வள நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில், அந்தப் பகுதியில் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இந்தப் பணியில் ஒடிசா மாநிலம், பாலிக்கர் மாவட்டம், தக்கரபுத்தா பகுதியைச் சேர்ந்த தொழிலாளிகள் நிராக்கரும், தோலாமணியும் ஈடுப்பட்டிருந்தனர்.
தொழிலாளிகள் இருவரும் தூண்களை அமைப்பதற்காக இரும்புக் கம்பிகளை பள்ளத்தில் தூக்கி நிறுத்தினராம். அப்போது, மேலே சென்ற மின் கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். உடனடியாக அருகில் இருந்த தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு, உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நிராக்கர் (22) இறந்தார். மற்றொரு தொழிலாளியானதோலாமணிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தனியார் நிறுவன மேலாளர் அசோக் அனக்காவூர் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், உதவி காவல் ஆய்வாளர் ராஜ்ஜெய்குமார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து
வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








