அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

திருமண அமைப்பாளர்கள் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் அகில பாரத திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:42 am IST

திருவண்ணாமலையில் அகில பாரத திருமண அமைப்பாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் நிறுவனர் தலைவர் என்.ராஜா தலைமை வகித்தார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் வி.ராமகிருஷ்ணன், மாநில மகளிரணித் தலைவி பி.சுசீலா, மாநிலப் பொதுச் செயலர் டி.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக் குழுத் தலைவர் பி.ஆறுமுகம் வரவேற்றார். தமிழகம், கேரளம், புதுவை மாநிலங்களின் பாரதீய மஸ்தூர் சங்க தென்பாரத அமைப்புச் செயலர் 
எஸ்.துரைராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பது, திருமண அமைப்பாளர்களுக்கு மத்திய - மாநில அரசுகள் பாதுகாப்பும், தொழில் அங்கீகாரமும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.