பிகாரில் மகளிர் ரயில் பெட்டியில் இருந்து ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், தானாபூர் ரயில் நிலையத்தில் மகளிர் ரயில் பெட்டியில் இருந்து சனிக்கிழமை ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். புணே மற்றும் தானாபூருக்கு இடையே இயக்கப்படும் தானாபூர் சிறப்பு கட்டண ரயிலின் உள்ளே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
காலை சுமார் 11.30 மணியளவில் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தடைந்தது. பயணிகள் இறங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ஆய்வின்போது, மகளிர் பெட்டி ஒன்று உள்ளிருந்து பூட்டப்பட்டிருப்பதை ரயில்வே ஊழியர்கள் கண்டறிந்தனர். உடனே ஊழியர்கள் அவசரகால வெளியேறும் ஜன்னலை உடைத்து பெட்டிக்குள் நுழைந்தனர்.
அப்போது கழுத்தில் பெல்ட் கட்டப்பட்ட நிலையில் பக்கவாட்டு கைப்பிடியில் தொங்கிக்கொண்டிருந்த ஆணின் சடலத்தைக் கண்டனர். பலியானவர் 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர் என நம்பப்படுவதாகவும், அவரது உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் தானாபூர் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சம்பவ இடத்தை ஆய்வு செய்த தடயவியல் குழு, சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு சுமார் ஆறு முதல் ஏழு மணி நேரத்திற்கு முன்பு மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், இறந்தவரிடமிருந்து எந்த அடையாள ஆவணங்களும் மீட்கப்படவில்லை. சடலம் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தவும், குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். இதனிடையே விசாரணையின் ஒரு பகுதியாக, தானாபூரை அடைவதற்கு முன்பு ரயில் நின்றிருந்த நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
A man was found dead under mysterious circumstances inside a women's coach of a train at Danapur railway station in Bihar on Saturday, police said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடலூா் வனப் பகுதியில் ஆண் சிறுத்தை சடலம் மீட்பு

சிவகங்கை தெப்பக் குளத்தில் ஆண் சடலம் மீட்பு

திருச்சி ரயில் நிலையத்தில் ஆண் சடலம் மீட்பு

பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து
விடியோக்கள்

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India




