மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷா
/

மட்டபிறையூரில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்

சேத்துப்பட்டு    ஒன்றியம், மட்டபிறையூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 9:49 am IST

சேத்துப்பட்டு    ஒன்றியம், மட்டபிறையூர் ஊராட்சியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் போளூர் எம்எல்ஏ கே.வி.சேகரன் கலந்துகொண்டார். அப்போது, பொதுமக்கள் குடிநீர்ப் பிரச்னை, தெருவிளக்கு, கால்வாய், நூலகம் அமைக்க வேண்டும், ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 100 நாள்களுக்கு வேலை வழங்க வேண்டும், கிராமத்தில் துணை சுகாதார நிலையம் திறக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ கே.வி.சேகரன் பேசியதாவது: மட்டபிறையூர் ஊராட்சியில் பொதுமக்கள் தெரிவித்த குறைகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறி நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வேன். மேலும், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். 
நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலர் பி.மனோகரன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.