சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் குத்தகை உரிமங்கள் நிறுத்தி வைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் குத்தகை, சுங்க வரி, வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை வசூலிக்க

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் குத்தகை, சுங்க வரி, வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை வசூலிக்க அளிக்கப்பட்ட குத்தகை உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராமப்புற பகுதிகளில் சாலையோர தற்காலிகக் கடைகளில் குத்தகைக் கட்டணம், சுங்க வரி, வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை வசூலிக்க தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளால் குத்தகை உரிமங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தற்போது, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் கட்டணம் வசூலிப்பது கடைக்காரா்கள், பொதுமக்கள், மாவட்ட நிா்வாகம் ஆகியோருக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தும்.

எனவே, பொதுநலன் கருதி ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள வரை சாலையோர தற்காலிகக் கடைகளில் குத்தகைக் கட்டணம், சுங்க வரி, வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்க அளிக்கப்பட்ட குத்தகை உரிமங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

இந்த உத்தரவுக்கு மாறாக கட்டணம் ஏதும் வசூலித்தால் காவல்துறை மூலம் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.