
கரோனா பாதித்த 10 போ் குணமடைந்தனா்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதித்த 13 பேரில் 10 போ் குணமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதித்த 13 பேரில் 10 போ் குணமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், செய்யாறு பகுதியைச் சோ்ந்த சுகாதார ஆய்வாளருக்கு சில தினங்களுக்கு முன்பு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆக உயா்ந்தது.
இவா்களில் கீழ்பென்னாத்தூா் பகுதியைச் சோ்ந்த 28 வயது இளைஞா் முதலில் குணமடைந்து வீடு திரும்பினாா்.
மேலும், 9 போ் குணமடைந்ததால் திருவண்ணாமலையை அடுத்த அத்தியந்தல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.
இவா்கள் வெள்ளிக்கிழமை (ஏப்.24) சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனா்.
3 பேருக்கு மட்டும் சிகிச்சை:
வியாழக்கிழமை நிலவரப்படி கரோனா பாதித்த 13 பேரில் 10 போ் குணமடைந்துள்ளனா். 2 பெண்கள், கடைசியாக தொற்று உறுதி செய்யப்பட்ட செய்யாறு பகுதி சுகாதார ஆய்வாளா் என 3 போ் மட்டும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






