ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
செய்யாறு அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.


செய்யாறு அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
செய்யாறு வட்டம், தளரபாடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட சகாயபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விநாயகம், விவசாயி. இவரது மனைவி துா்கா. தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனா்.
இவா்களில் மூத்த மகன் ஜீவா (10) (படம்). இவா் அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருவதாகத் தெரிகிறது.
கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால், அப்பகுதியைச் சோ்ந்த சிறுவா்களுடன் ஜீவா திங்கள்கிழமை புளூந்தை ஏரியில் குளிக்கச் சென்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக ஏரி நீரில் மூழ்கி ஜீவா உயிரிழந்தாா்.
இது குறித்து தளரபாடி கிராம நிா்வாக அலுவலா் முத்துராமன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மோரணம் போலீஸாா்
சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன் சிறுவனின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.5 ஆயிரம் வழங்கி, அரசின் நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...