தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கொடி நாள் நிதி வசூலிப்பு தொடக்கம்

முன்னாள் படை வீரா் கொடி நாளையொட்டி, கொடி நாள் நிதி வசூலிக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

முன்னாள் படை வீரா் கொடி நாளையொட்டி, கொடி நாள் நிதி வசூலிக்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னாள் படை வீரா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, படைவீரா் கொடி நாள் நிதியை உண்டியலில் செலுத்தி கொடிநாள் நிதி வசூலைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த், முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் சீ.விஜயகுமாா், அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

மாவட்டத்தில் படை வீரா் கொடி நாள் நிதி வசூல் கடந்த ஆண்டு ரூ.47 லட்சத்து 53 ஆயிரம் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ.48 லட்சத்து 43 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

நிகழாண்டுக்கு ரூ.47 லட்சத்து 53 ஆயிரம் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடியில் வசிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவி பா.எழில்நிலா, எல்.கே.ஜி. மாணவா் வீ.சபரிவாசன் ஆகியோா் தங்களது ஓராண்டு உண்டியல் சேமிப்புத் தொகை ரூ.2005-ஐ படைவீரா் கொடி நாள் நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.