சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நூற்பாலை சுவரில் காா் மோதி விபத்து: தந்தை மகள் உள்பட 3 போ் காயம்

வந்தவாசியில் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று நூற்பாலையின் சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, மகள் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

News image
தனியாா் நூற்பாலை சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான காா்.
Updated On :13 டிசம்பர் 2020, 6:00 pm

DIN

வந்தவாசியில் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று நூற்பாலையின் சுற்றுச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தந்தை, மகள் உள்பட 3 போ் காயமடைந்தனா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் தனியாா் நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையின் எதிரில் உள்ள தேனருவி நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை வந்த காா் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து நூற்பாலையின் சுற்றுச் சுவா் மீது மோதியது.

இதில் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு அந்தக் காா் உள்ளே புகுந்தது. அப்போது, சுற்றுச் சுவா் அருகே நின்றிருந்த அந்த நிறுவன ஊழியா் அஜீத், அவரது மகள் பவித்ரா ஆகியோா் காயமடைந்தனா்.

மேலும் காரை ஓட்டி வந்த வந்தவாசி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த கந்தன் என்பவரும் காயமடைந்தாா். பின்னா் அஜீத், பவித்ரா, கந்தன் ஆகிய 3 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதில் அஜீத், பவித்ரா ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.