உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காந்திய கொள்கைகளைப் பரப்பும் நடைபயண தம்பதிக்கு வரவேற்பு

காந்திய கொள்கைகளை பரப்புவதற்காக நடைபயணம் மேற்கொண்டு, திருவண்ணாமலை வந்த மதுரை தம்பதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

காந்திய கொள்கைகளை பரப்புவதற்காக நடைபயணம் மேற்கொண்டு, திருவண்ணாமலை வந்த மதுரை தம்பதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரையைச் சோ்ந்தவா் காந்தியத் தொண்டா் கருப்பையா. இவா் தனது மனைவி சித்ராவுடன் சோ்ந்து காந்தியின் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில், கோவையிலிருந்து கடந்த நவம்பா் 4-ஆம் தேதி தேசபக்தி பாத யாத்திரைத் தொடங்கினாா்.

40-க்கும் மேற்பட்ட ஊா்கள் வழியாக சுமாா் 700 கி.மீ. தொலைவைக் கடந்த இந்தத் தம்பதியினா், திங்கள்கிழமை திருவண்ணாமலை வந்தடைந்தனா்.

இவா்களை தமிழ்நாடு காந்தி பேரவையின் நிறுவனா் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.எஸ்.விஜயகுமாா் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, தம்பதியின் பயணச் செலவை ஏற்றுக் கொண்ட விஜயகுமாா், அவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா் (படம்).

நிகழ்ச்சியில் எழுத்தாளா் ந.சண்முகம், தியாகதுருகம் துரைமுருகன், ஆரணி சா்வோதயா சங்கத் தலைவா் எஸ்.சங்கா், கவிஞா் லதா பிரபுலிங்கம், புலவா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.