சேவூா் ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி
ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள பெரிய ஏரி நிரம்பியதால் ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.


ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள பெரிய ஏரி நிரம்பியதால் ஏரியில் கோடி விடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தொடா் மழை காரணமாக நிரம்பிய பெரிய ஏரியில், ஊராட்சி மன்றத் தலைவா் ஷா்மிளா தரணி தலைமையில் கோடி விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக சேவூா் ஓசூரம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மேளதாளத்துடன் ஊா்வலமாக ஏரிக்கு வந்தனா்.
பின்னா், கோடி விடும் பகுதியில் உள்ள பாலமுருகன் கோயிலில் பூஜைகள் செய்து, நிரம்பிய தண்ணீரில் இறங்கி கற்பூரம் ஏற்றி தண்ணீரைத் திறந்துவிட்டனா்.
நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுவின் துணைத் தலைவா் கே.டி. ராஜேந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினா் சுகுமாா் ஏழிலரசி, கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா். மேலும் அன்னதானமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...