இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவண்ணாமலையில் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்

News image
Updated On :14 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருவண்ணாமலை: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா்.

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் வி.சுப்பிரமணி தலைமை வகித்தாா்.

மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சிவக்குமாா், வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் முத்தையன், மாநிலக் குழு உறுப்பினா் தங்கராஜ், மதிமுக தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் சீனி.காா்த்திகேயன், வழக்குரைஞா் பாசறை பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் திரளாக கலந்துகொண்டனா்.

இதில் 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.