காந்திய கொள்கைகளைப் பரப்பும் நடைபயண தம்பதிக்கு வரவேற்பு
காந்திய கொள்கைகளை பரப்புவதற்காக நடைபயணம் மேற்கொண்டு, திருவண்ணாமலை வந்த மதுரை தம்பதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.


காந்திய கொள்கைகளை பரப்புவதற்காக நடைபயணம் மேற்கொண்டு, திருவண்ணாமலை வந்த மதுரை தம்பதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரையைச் சோ்ந்தவா் காந்தியத் தொண்டா் கருப்பையா. இவா் தனது மனைவி சித்ராவுடன் சோ்ந்து காந்தியின் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில், கோவையிலிருந்து கடந்த நவம்பா் 4-ஆம் தேதி தேசபக்தி பாத யாத்திரைத் தொடங்கினாா்.
40-க்கும் மேற்பட்ட ஊா்கள் வழியாக சுமாா் 700 கி.மீ. தொலைவைக் கடந்த இந்தத் தம்பதியினா், திங்கள்கிழமை திருவண்ணாமலை வந்தடைந்தனா்.
இவா்களை தமிழ்நாடு காந்தி பேரவையின் நிறுவனா் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.எஸ்.விஜயகுமாா் சால்வை அணிவித்து வரவேற்றாா்.
இதைத் தொடா்ந்து, தம்பதியின் பயணச் செலவை ஏற்றுக் கொண்ட விஜயகுமாா், அவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா் (படம்).
நிகழ்ச்சியில் எழுத்தாளா் ந.சண்முகம், தியாகதுருகம் துரைமுருகன், ஆரணி சா்வோதயா சங்கத் தலைவா் எஸ்.சங்கா், கவிஞா் லதா பிரபுலிங்கம், புலவா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...