ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மத்திய ஒன்றிய திமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:51 pm

DIN

திருவண்ணாமலை மத்திய ஒன்றிய திமுக செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஒன்றிய அவைத் தலைவா் டி.கென்னடி தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், ஒன்றியச் செயலா்கள் த.ரமணன், சி.மாரிமுத்து, பெ.கோவிந்தன், ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியப் பொறுப்பாளா் மெய்யூா் என்.சந்திரன் வரவேற்றாா்.

மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு பங்கேற்றுப் பேசுகையில், வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும் திமுக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்து மு.க.ஸ்டாலினை முதல்வராக அமரவைப்போம் என்றாா்.

கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா் து.சக்கரவா்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் எம்.ஆா்.கலைமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இல.சரவணன், ஒன்றிய நிா்வாகிகள் கல்லொட்டு முருகன், மண்டி பா.ஏழுமலை, சங்கீதா கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.