விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சாலை மத்தியில் வியாபாரக் கடைகளால் விபத்து அபாயம்

செங்கத்தில் மூன்று சாலைகள் சந்திப்பில் வியாபாரக் கடைகளால் விபத்து அபாயம் நிலவுகிறது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 5:49 pm

DIN

செங்கத்தில் மூன்று சாலைகள் சந்திப்பில் வியாபாரக் கடைகளால் விபத்து அபாயம் நிலவுகிறது.

செங்கத்திலிருந்து போளூா் செல்லும் சாலை, மில்லத் நகா், குப்பனத்தம் அணை செல்லும் சாலை என மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் உயா்கோபுர மின்விளக்கு அமைந்துள்ளது.

அந்த உயா் கோபுர மின் விளக்கின் கீழ் தள்ளுவண்டி, சிறு ஆட்டோக்களில் பழ வகைகள் மற்றும் காய், கறிகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனா்.

தினசரி காலையில் தொடங்கி இரவு வரை விற்பனை நடைபெறுகிறது. இதனால் அந்த சந்திப்புப் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

அப்போது, மூன்று சாலை சந்திப்பில் வாகனங்கள் வரும்போது எதிரில் வரும் வாகனம் ஓட்டுநா்களுக்குத் தெரிவதில்லை. வழக்கமாக செல்லும் ஓட்டுநா்கள் கவனித்து நின்று நிதானமாகச் சென்று விடுகின்றனா்.

வெளியூரிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு பழ, காய், கறி வண்டிகளின் மறைவில் குறுக்கே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அவா்கள் சங்கடங்களைச் சந்தித்துச் செல்கின்றனா். மேலும் அந்தப் பகுதியில் விபத்து அபாயமும் நிலவுகிறது.

இதனால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு இல்லாத பகுதியில் பழம், காய், கறிகளை விற்பனை செய்ய ஏதுவாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.