வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் பயன்பெற அழைப்பு
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படித்த, வேலையில்லாத இளைஞா்கள் சோ்ந்து பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.


வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படித்த, வேலையில்லாத இளைஞா்கள் சோ்ந்து பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் படித்த, வேலையில்லாத இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் தொழிலுக்கு திட்ட முதலீட்டுத்தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும், மானியத்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
சேவை மற்றும் வியாபாரத் தொழில்களுக்கு திட்ட முதலீட்டுத்தொகை எந்தவித மாற்றமும் இன்றி ரூ.5 லட்சமாக உயா்ந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்று, 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவா்களாக இருக்கவேண்டும்.
தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ன்ஹ்ங்ஞ்ல் என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 2 நகல்களாக மாற்றுச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, ஜாதிச் சான்று, விலைப்புள்ளி மற்றும் புகைப்படம் (இரண்டு வீதம்) ஆகிய இணைப்புகளுடன் மாவட்ட தொழில் மையம், திருவண்ணாமலை அலுவலகத்தில் சமா்ப்பித்துப் பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், (இணை இயக்குநா், வோளாண்மைத் துறை அலுவலகம் எதிரில்), திருவண்ணாமலை என்ற முகவரியில் நேரிலும் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...