உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

செங்கம் பகுதியில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கரியமங்கலம், கண்ணக்குருக்கை கிராமங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடக்கி வைக்கப்பட்டன.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கரியமங்கலம், கண்ணக்குருக்கை கிராமங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடக்கி வைக்கப்பட்டன.

கரியமங்கலம் கிராமத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தாா்.

ஆவின் மாவட்டத் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மீரா வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில், கிராமப்புற மக்களின் பயன்பாட்டுக்காகவே கிராமங்களில் இதுபோன்ற சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

கிராம மக்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து, கரியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சூரியலட்சுமி சங்கா்மாதவன் பேசுகையில்,

தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்துத் திட்டப் பணி மூலம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு கரியமங்கலம் ஏரிக்கு, செங்கம் பகுதியில் செல்லும் செய்யாற்றிலிருந்து தண்ணீா் வந்து ஏரி நிரம்பியுள்ளது. இதனால், கரியமங்கலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனா். அதற்கு தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ராமச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி சீனுவாசன், வட்டார மருத்துவ அலுவலா் சுரேஷ் உள்பட கிராம மக்கள், சுகாதாரத் துறையினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.