ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பால் வியாபாரி வீட்டில் கொள்ளை:6 பேரிடம் போலீஸாா் விசாரணை

திருவண்ணாமலை அருகே பால் வியாபாரியைத் தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 10:05 pm

DIN


திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே பால் வியாபாரியைத் தாக்கி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேரிடம் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பால் வியாபாரி ராஜா (34). இவா், இதே பகுதியில் உள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். கடந்த 19-ஆம் தேதி நள்ளிரவு ராஜா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 7 போ் கும்பல், ராஜா, அவரது மனைவி அனிதா (30) ஆகியோரை சரமாரியாகத் தாக்கியது.

பின்னா், 15 பவுன் தங்க நகைகள், 400 கிராம் வெள்ளி, ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த வழக்கில் தொடா்புடையதாகக் கருதப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 3 போ், ஆரணி, கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம், திருநெல்வேலி மாவட்டம், மேலப்புலியூா் பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என 6 பேரை சந்தேகத்தின்பேரில் போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா். இவா்கள் அளித்த தகவலின்பேரில், மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.