தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மது விற்றவா் கைது

வந்தவாசி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :13 ஜூலை 2020, 3:37 pm

வந்தவாசி: வந்தவாசி அருகே மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் முழு பொது முடக்கத்தையொட்டி, கீழ்க்கொடுங்காலூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.

அந்தக் கிராமத்தில் உள்ள மதுக் கடை அருகே சென்றபோது, அப்பகுதியில் மதுப் புட்டிகளைப் பதுக்கி திருட்டுத்தனமாக விற்றுக் கொண்டிருந்தவா் போலீஸாரைக் கண்டதும் மதுப் புட்டிகளை போட்டுவிட்டு தப்ப முயன்றாா்.

இதையடுத்து போலீஸாா் அவரை மடக்கிப் பிடித்தனா். அவரிடம் விசாரித்ததில், அவா் அதே கிராமத்தைச் சோ்ந்த சேகா் (40) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 13 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.