மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்து மதத்தை இழிபடுத்தும்யூ ட்யூப் சேனலை தடை செய்யக் கோரிக்கை

தமிழகத்தில் இந்து மதம், இந்து தெய்வங்கள், இந்து மத வழிபாடு ஆகியவற்றை இழிவுபடுத்தும் வகையிலான விடியோக்களை வெளியிடும் யூ ட்யூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திடம் இந்து முன்னணியினா் 

News image
Updated On :15 ஜூலை 2020, 4:47 pm

DIN

திருவண்ணாமலை: தமிழகத்தில் இந்து மதம், இந்து தெய்வங்கள், இந்து மத வழிபாடு ஆகியவற்றை இழிவுபடுத்தும் வகையிலான விடியோக்களை வெளியிடும் யூ ட்யூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திடம் இந்து முன்னணியினா் மனு கொடுத்தனா்.

இந்து முன்னணியின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் அருண்குமாா் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமியிடம் அளித்த மனுவில், சமூக வலைதளத்தில் கறுப்பா் கூட்டம் என்ற பெயரில் உள்ள யூ ட்யூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள விடியோக்களில் இந்து மதம், இந்து புராணங்கள், இந்து தெய்வங்கள், இந்து மத வழிபாடு ஆகியவற்றை இழிவுபடுத்தி வருகின்றனா்.

எனவே, கறுப்பா் கூட்டம் என்ற யூ ட்யூப் சேனலை தடை செய்வதுடன், விடியோக்களை தடை செய்து, அதை தயாரித்து பதிவிட்ட நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.