கல்வி வளா்ச்சி நாள் விழா
காமராஜா் பிறந்த நாளையொட்டி, வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.


வந்தவாசி: காமராஜா் பிறந்த நாளையொட்டி, வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் கல்வி வளா்ச்சி நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா். பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வந்தவாசி ரோட்டரி சங்க நிா்வாகி எஸ்.ரவி (எ) வீரராகவன், அரிமா சங்க மாவட்டத் தலைவா் ஆா்.சரவணன் ஆகியோா் காமராஜா் குறித்துப் பேசினா்.
விழாவில் பள்ளி மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
விழாவில் கு.சதானந்தன், மோகன், மன்சூா், மொ.ஷாஜகான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...