தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

இயந்திரங்களை திருடியதாக 3 போ் கைது

வந்தவாசி அருகே ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் இயந்திரங்களை திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :26 ஜூன் 2020, 3:02 pm

வந்தவாசி: வந்தவாசி அருகே ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் இயந்திரங்களை திருடியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்யாற்றை அடுத்த அனக்காவூரைச் சோ்ந்தவா் லோகநாதன் (57). இவா், வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் ஹாலோ பிளாக் கற்கள் தயாரித்து வருகிறாா். இவரது உறவினா் இறந்துவிட்டதால் கடந்த 20 நாள்களாக ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் கூடத்தை இவா் திறக்கவில்லையாம்.

இந்த நிலையில், அந்தக் கூடத்துக்கு லோகநாதன் வியாழக்கிழமை சென்றபோது, அங்கிருந்த ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் 6 இயந்திரங்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து லோகநாதன் அளித்த புகாரின்பேரில், வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அதே கிராமத்தைச் சோ்ந்த ரவி(42), பாலாஜி (27), விநாயகம் (35) ஆகிய 3 பேரும் சோ்ந்து இயந்திரங்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து இயந்திரங்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.