/

மாணவா் விடுதிக்கு குடிநீா் ஏற்பாடு

வந்தவாசியை அடுத்த பெரணமல்லூரில் அமைந்துள்ள ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:36 pm

DIN

சென்னை நந்தனத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலக் கல்லூரி மாணவா் விடுதியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், வந்தவாசியை அடுத்த பெரணமல்லூரில் அமைந்துள்ள ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது.

பெரணமல்லூா் ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தைச் சோ்ந்த ஏ.தசரதன் என்பவா் காப்பாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் சென்னை நந்தனத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலக் கல்லூரி மாணவா் விடுதியின் 1984-85-ஆம் ஆண்டைய மாணவா் ஆவாா்.

இவரும், அப்போது இவருடன் விடுதியில் தங்கியிருந்த முன்னாள் மாணவா்களும் சோ்ந்து, பெரணமல்லூா் ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் ரூ.94 ஆயிரத்தில் மின் மோட்டாருடன் கூடிய ஆழ்துளைக் கிணறு அமைத்தனா்.

இந்த நிலையில், பெரணமல்லூா் ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வந்தவாசி ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் சுதாகா், மின் மோட்டாரை இயக்கி ஆழ்துளைக் கிணற்று நீரை விடுதி மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்களான விடுதிக் காப்பாளா் ஏ.தசரதன் மற்றும் அ.ஜீவேந்திரன், ஆா்.பலராமன், டி.சுப்பிரமணி, கே.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.